Enable Javscript for better performance
இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய துணைத் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து, எல்லையில் இந்தியப் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் வியாழக்கிழமை கூறியதாவது:
    இந்திய பாதுகாப்புப் படைகள் எல்லையில் கடந்த 15ஆம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தின. இதில் தேரா ஷேர் கான் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார். அப்பாவி கிராம மக்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
    இதையடுத்து, இந்திய துணைத் தூதரை சம்மன் அனுப்பி, எல்லையில் அத்துமீறி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டது.
    எல்லையில் இந்திய படைகள் இதுவரை 1,000 முறை அத்துமீறி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் பலியாகியுள்ளனர். இந்த அத்துமீறலானது, கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 1970 முறை இந்தியப் படைகள் அத்துமீறியுள்ளன.
    இந்தியாவின் அத்துமீறலால் இந்தப் பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் அரசு அரசியல் ரீதியாகவும், தார்மீக, ராஜீய ரீதியாகவும் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்.
    இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல உருது புலவர் பயாஸ் அகமதுவின் மகளை பேச அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது. இந்திய அரசானது, தனது உள்நாட்டு அரசியலுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி வருகிறது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai