Enable Javscript for better performance
உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜேத் மலானி மனு- Dinamani

சுடச்சுட

    
    ramjeth

    கர்நாடக விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜேத் மலானி மனு தாக்கல் செய்துள்ளார்.
    உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மனுவை ராம்ஜேத் மலானி தாக்கல் செய்தார். அதில், அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரத்தை தவறாக கர்நாடக ஆளுநர் பயன்படுத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ராம்ஜேத் மலானி நேரில் வலியுறுத்தினார். அத்துடன் தாம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் மனுத் தொடுக்கவில்லையென்றும், அரசியலமைப்பு ரீதியில் கர்நாடக ஆளுநர் எடுத்த முடிவால் வருத்தமுற்றே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    இதைக் கேட்ட நீதிபதிகள், ராம்ஜேத் மலானியின் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.
    இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
    இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்பு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மனு தாக்கல் செய்துள்ளன. ஆதலால் அந்த அமர்வு முன்பு நீங்களும் (ராம்ஜேத் மலானி) உங்களது மனுவை அளிக்கலாம். அதன் மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai