Enable Javscript for better performance
எடியூரப்பா எந்த முக்கிய முடிவும் எடுக்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தடை- Dinamani

சுடச்சுட

    

    எடியூரப்பா எந்த முக்கிய முடிவும் எடுக்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தடை

    By DIN  |   Published on : 18th May 2018 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc6

    புதுதில்லி: நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கர்நாடக முதல்வராக எடியூரப்பா எந்த விதமான முடிவுகளும் எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.   

    மும்பைத் தாக்குதல் வழக்கில் விடிய விடிய விசாரணை நடத்திய யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு பிறகு, அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடகத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். 
     
    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகியும் மத்திய அரசு சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலும் வாதங்களை முன்வைத்தனர். எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

    விசாரணையின் முடிவில், நாளை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 
    மேலும் சட்ட ஒழுங்கு துறையும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடக டிஜிபிதான் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். 

    நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கர்நாடக முதல்வராக எடியூரப்பா எந்த விதமான முடிவுகளும் எடுக்க கூடாது என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

    முக்கியமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் கையை உயர்த்தி ஆதரவை வெளிப்படுத்தும் முறையை கடைபிடிக்க வேண்டும். 
    பாதுகாப்பு, டிரான்ஸ்பர், என எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது என்று நீதிபதிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai