Enable Javscript for better performance
எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உடனடியாக அவசரச் சட்டம்: லோக் ஜனசக்தி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உடனடியாக அவசரச் சட்டம்: லோக் ஜனசக்தி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு மாற்றாக, மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து தில்லியில் அக்கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான், அவரது மகன் சிராக் பாஸ்வான் ஆகியோர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
    எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. எனினும், உச்ச நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறையாகும். உச்ச நீதிமன்றம் விடுமுறை முடிந்து மீண்டும் ஜூலை மாதம் 2ஆம் தேதிதான் தொடங்கும்.
    எனவே, தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தொடங்குவது தாமதமாகும்.
    எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பானது, அந்தச் சட்டத்தை நீர்த்து போகச் செய்து விட்டது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.
    ஆதலால், உடனடியாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு எங்கள் கட்சி கடிதம் எழுதவுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
    எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. அதில், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்படும் புகார் மீது உடனடி வழக்குப்பதிவு செய்யவோ, அல்லது கைது நடவடிக்கையை மேற்கொள்ளவோ கூடாது என்று கேட்டுக் கொண்டது. 
    இந்த தீர்ப்பை கண்டித்து, நாடு முழுவதும் தலித் அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தின. இதில் வடமாநிலங்களில் ஏராளமானோர் பலியாகினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai