Enable Javscript for better performance
கர்நாடகா பாணியில்.. கோவா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகா பாணியில்.. கோவா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

    By DIN  |   Published on : 18th May 2018 04:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress


    பனாஜி: கர்நாடக ஆளுநர் செய்ததைப் போல, கோவா மாநிலத்தில் தனிப் பெருங்கட்சியாக உள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இன்று மதியம், கோவா மாநிலத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர், ஆளுநர் மிருதுளா சிங்கை சந்தித்தனர்.

    அப்போது, கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியைக் கலைத்துவிட்டு, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெருங்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரியுள்ளனர்.

    கர்நாடகாவில், காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு அதிகப் பெரும்பான்மை இருந்த போதிலும், தனிப் பெரும் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா.

    இதையடுத்து, கர்நாடக பாணியில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு கோரிக்கை வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai