Enable Javscript for better performance
கர்நாடக ஆட்சி தொடர்பான வழக்கு: பணிமூப்பில் ஆறாம் இடமுள்ள நீதிபதி விசாரிப்பதின் பின்னணி- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக ஆட்சி தொடர்பான வழக்கு: பணிமூப்பில் ஆறாம் இடமுள்ள நீதிபதி விசாரிப்பதின் பின்னணி

    By DIN  |   Published on : 18th May 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் கர்நாடக மாநில ஆட்சி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் வரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரிப்பதன் பின்னணி என்ன? என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
    கர்நாடக முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவை ஆளுநர் அழைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை இரவு வழக்குத் தொடுக்கப்பட்டது. 
    இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.ஏ.பாப்தே ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.
    நள்ளிரவில் தொடங்கிய விசாரணை அதிகாலை 5 மணிக்கு முடிந்தது. அப்போது, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். அதே நேரத்தில், தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் குறித்து ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (மே 18) தொடர இருக்கிறது.
    தேசமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் வரிசையில் 6-ஆவது இருக்கும் நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
    அண்மையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பதவி நீக்க நோட்டீஸ் அளித்தது. இதனால், காங்கிரஸ் தொடுத்த இந்த வழக்கில் மேலும் சர்ச்சையை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்கவில்லை என்று கணிக்க முடிகிறது. மேலும், மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து பேட்டியளித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, அவர்களுக்கு இந்த வழக்கு ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
    இப்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் சிக்ரி, பாப்தே, அசோக் பூஷண் ஆகியோர் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்களாவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai