Enable Javscript for better performance
கர்நாடக ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

    By DIN  |   Published on : 18th May 2018 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramnath

    குடியரசுத் தலைவரை வியாழக்கிழமை சந்தித்து 15-ஆவது நிதிக் குழு தொடர்பாக மனு அளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆந்திரம், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி மாநில நிதியமைச்சர்கள்.

    கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததன் மூலம் ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கூறினார். 
    புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மற்றும் ஆந்திரம், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை அவரது மாளிகையில் சந்தித்து 15-ஆவது நிதிக் குழு தொடர்பாக முறையிட்டனர்.
    பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் வி.நாராயணசாமி கூறியதாவது: 
    கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்களுடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்து 15- வது நிதிக்குழு தொடர்பாக முறையிட்டோம். அக்குழுவின் அறிக்கை இந்திய அரசியல் சட்டம், மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதை சுட்டிக் காட்டினோம். மேலும், அதில் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ள ஷரத்துகளை மாற்றி அமைக்குமாறும் கோரினோம். தில்லி, புதுச்சேரியை நிதிக் குழுவில் சேர்க்கவும் கேட்டுக் கொண்டோம்.
    கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு. இதனால், குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
    காங்கிரஸ் - மதஜ கூட்டணி தங்களுக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி, ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இந்நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது ஜனநாயகப் படுகொலையாகும். கோவாவில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸையும், பிகாரில் அதிக இடங்களை வென்ற ராஷ்டீரிய ஜனதா தளத்தையும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. ஆனால், மாறாக கர்நாடகத்தில் மட்டும் பாஜகவை ஆளுநர் அழைத்தது எந்த வகையில் நியாயம்? என்றார் வி.நாராயணசாமி.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai