Enable Javscript for better performance
கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு : எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு : எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 18th May 2018 12:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yeddyurappa


    புது தில்லி: கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஒரு வார கால அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நடத்தவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    அந்த உத்தரவில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை, எடியூரப்பா அரசு கொள்கை முடிவு எடுக்கத் தடை விதிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா அரசு எந்த நியமன எம்எல்ஏவையும் நியமிக்கக் கூடாது என்றும், மூத்த எம்எல்ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

    கர்நாடகாவில் நியமன எம்எல்ஏவுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதால், நியமன எம்எல்ஏக்களையும், ஆங்கிலோ இந்தியன்களையும் எம்எல்ஏக்களாக நியமிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் தந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாளையே (சனிக்கிழமை மாலை)பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai