Enable Javscript for better performance
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினராக ஆங்கிலோ இந்தியரை நியமிக்க எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் காங். மனு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினராக ஆங்கிலோ இந்தியரை நியமிக்க எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் காங். மனு

    By DIN  |   Published on : 18th May 2018 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் முன்பு நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியரை நியமிக்க ஆளுநர் வஜுபாய் வாலா பரிந்துரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளன.
    பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கட்சிகள் புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. அந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க மறுத்தது.
    மேலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பாஜக சார்பில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பெயர் பட்டியலை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அந்த மனுவையும், ஆங்கிலோ இந்தியரை உறுப்பினராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், 'சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் வரை ஆங்கிலோ இந்தியரை உறுப்பினராக நியமிக்கக் கூடாது என்று அகில இந்திய ஆங்கிலோ இந்தியர் சங்கத்தின் தலைவர் ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு கடந்த புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக ஆங்கிலோ இந்தியனை நியமிக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆதரவு உறுப்பினர்களை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கிலோ இந்தியனை நியமிகக்க முயற்சி நடைபெறலாம். அவ்வாறு நியமிக்கப்பட்டால் அது அதர்மமாகும்' என்று இடைக்கால மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆங்கிலோ இந்திய உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து, கர்நாடக சட்டப் பேரவையில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai