Enable Javscript for better performance
காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ..க்கள் மொபைல் ஆப் மூலம் கண்காணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.,க்கள் மொபைல் ஆப் மூலம் கண்காணிப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karnataka-mlas

    பெங்களூரு: காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ., க்கள் மொபைல் ஆப் மூலம் யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 104 இடங்களில் வென்றுள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க குறைந்தது 112 இடங்கள் தேவைப்பட்டது. எனினும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலா, எடியூரப்பாவுக்கு வாய்ப்பளித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 15 நாள்கள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார். 

    இந்நிலையில், பாஜகவினரின் ஆசைவார்த்தைகளுக்கு இணங்கி எந்த எம்எல்ஏவும் கட்சித் தாவிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காங்கிரஸ், ஆனந்த்சிங் நீங்கலாக முதல்வர் சித்தராமையா உள்பட தங்கள் எம்எல்ஏக்கள் 77 பேரையும் பெங்களூரு புறநகர் பகுதியில் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள பிடதி நகரில் அமைந்துள்ள ஈகிள்டன் தங்கும் விடுதிக்கு மே 16-ஆம் தேதி அழைத்துசென்றது. 

    எடியூரப்பா வியாழக்கிழமை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால், அதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் மஜதவின் முன்னணித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றுவிட்டு தங்கள் விடுதிகளுக்குத் திரும்பினர்.

    இதனிடையே, ஈகிள்டன் தங்கும் விடுதிக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை எடியூரப்பா அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவினர் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக பாஜக பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றம்சாட்டின. இதை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருசிலர் உறுதி செய்தனர். 

    இந்நிலையில், கர்நாடகத்தில் தங்கியிருந்தால் பாஜகவினரின் ஆசை வார்த்தைகள் அல்லது மிரட்டலுக்கு எம்எல்ஏக்கள் அடிபணிய நேர்ந்துவிடும் என்பதை உணர்ந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் எம்.எல்.ஏ.,க்களை கேரள மாநிலத்திற்கு அழைத்து செல்ல கூட்டாக முடிவு செய்தனர். அதன்படி, கேரள மாநிலம், கொச்சின் நகரில் உள்ள தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் கொச்சி அழைத்து செல்ல திட்டமிட்டன. ஆனால் இரவில் விமானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் இரவோடு இரவாக பெங்களூருவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றிற்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாஜகவினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க அவர்களின் மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மொபைல் போன்களை வாங்கி வைப்பதற்கு பதிலாக, அவர்கள் மொபைல் அழைப்புக்களை ரெக்கார்ட் செய்வதற்காக ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யும்படி சொல்லப்பட்டுள்ளதாம். 

    மொபைல் ஆப் மூலம் எம்.எல்.ஏ.,க்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டு வருவதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலரே மட்டு உறுதி செய்தள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தொடர்பான வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (மே 18) தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்தத் தீர்ப்பை பார்த்துக் கொண்டு மீண்டும் கர்நாடத்துக்கு திரும்புவது குறித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai