Enable Javscript for better performance
சோனியா, பிரியங்காவுடன் சித்து சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப் மாநில கேபினட் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோரை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார்.
    அப்போது அவர், கட்சித் தலைமை மீதான தனது அர்ப்பணிப்பு குறித்து இருவரிடமும் உறுதி தெரிவித்தார். கடந்த 1988-ஆம் ஆண்டு சாலையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வழக்கிலிருந்து சித்துவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இச்சூழலில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் புதிதாகத் தொடங்க அவர் சோனியாவிடம் ஆசி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், பிரியங்கா காந்தியை தனக்கான முன்னுதாரணமாக குறிப்பிட்ட சித்து, தாம் காங்கிரஸில் சேருவதற்கு உந்துதலாக இருந்ததும் பிரியங்கா தான் என்று குறிப்பிட்டார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் புதன்கிழமை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது அந்தச் சந்திப்பை 'உண்மையான தொண்டனுக்கும், அவனது தலைவனுக்குமான ஒன்று' என்று சித்து குறிப்பிட்டிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai