Enable Javscript for better performance
ஜனநாயகத்தை பாதுகாக்க இயக்கம்: யெச்சூரி- Dinamani

சுடச்சுட

    

    ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய இயக்கத்தை உருவாக்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
    கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். அதன் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம். அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் மீறப்பட்டால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மிகப் பெரிய இயக்கத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என்றார் யெச்சூரி.
    ஜனநாயக பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்குவது குறித்து, காங்கிரஸ், மஜத, இடதுசாரிகள், மாநில கட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்து தில்லி அல்லது பெங்களூரில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, கர்நாடகத்தில் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் அணுகியது.
    அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை வெள்ளிக்கிழமை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai