Enable Javscript for better performance
தூதஞ்சல், பொருள் விநியோக சேவையை தொடங்குகிறது டப்பாவாலா- Dinamani

சுடச்சுட

    

    தூதஞ்சல், பொருள் விநியோக சேவையை தொடங்குகிறது டப்பாவாலா

    By DIN  |   Published on : 18th May 2018 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dappa-vala

    மும்பையில் அலுவலகங்களுக்கு உணவு பெட்டிகளை நேரடியாக எடுத்துச் சென்று வழங்கி வரும், டப்பாவாலா அமைப்பின் சார்பில் விரைவில் தூதஞ்சல் (கொரியர்) மற்றும் பொருள் விநியோக (பார்சல்) சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டப்பாவாலா அமைப்பின் கீழ் 50,000 பேர் பணியாற்றுகின்றனர். அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு இவர்கள் உணவு பெட்டிகளை எடுத்துச் சென்று வழங்குவர். இது குறைந்த கட்டணத்திலான சேவையாகும். பெரும்பாலும் மின்சார ரயில்களையும், மிதிவண்டிகளையுமே தங்களது பணிக்கு டப்பாவாலா ஊழியர்கள் பயன்படுத்துவர்.

    இந்நிலையில், இந்தத் தொழிலின் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக தூதஞ்சல் மற்றும் பொருள் விநியோக சேவையை தொடங்க டப்பாவாலா திட்டமிட்டுள்ளது. 
    இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேகர், வியாழக்கிழமை கூறியதாவது:

    மும்பை மாநகரத்தில் தூதஞ்சல் மற்றும் பொருள் விநியோக சேவையை தொடங்குவது குறித்த இறுதிக்கட்ட ஆலோசனையில் இருக்கிறோம்.

    எங்களது உறுப்பினர்களின் வருவாயை பெருக்குவதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம். தூதஞ்சல் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிகராக குறைவான நேரத்தில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    உணவுப் பெட்டிகளை கொண்டு சேர்த்த பிறகு, தூதஞ்சல் சேவையில் ஈடுபடுவதா அல்லது அதற்கு முன்பாகவே இதை செய்யலாமா என்பதையும், எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பதையும் ஆலோசித்து வருகிறோம்.

    சில பகுதிகளில் சோதனை முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். எங்களது உறுப்பினர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.

    இதுதவிர, இணைய வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும் பொருள்களைப் பெற்று விநியோகிப்பது குறித்து அந்நிறுவனங்களிடம் பேசியுள்ளோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai