Enable Javscript for better performance
தேவெ கௌடாவுடன் ராகுல் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ஹெச்.டி.தேவெ கௌடாவை தொலைபேசியில் வியாழக்கிழமை தொடர்புகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
    அப்போது, கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.
    இருவரும் எந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
    கர்நாடகத்தின் முதல்வராக பாஜகவின் எடியூரப்பா வியாழக்கிழமை பதவியேற்றார். அவர் 15 நாள்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தேர்தல் முடிவுக்கு பிறகு, கூட்டணி அமைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு அந்த மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுக்காததை அடுத்து, அந்த விவாகரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு காங்கிரஸ் எடுத்துச் சென்றுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai