Enable Javscript for better performance
நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் - மஜத தரப்பு வாதம்- Dinamani

சுடச்சுட

    

    நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் - மஜத தரப்பு வாதம்

    By DIN  |   Published on : 18th May 2018 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lawwww


    புது தில்லி: கர்நாடக சட்டப்பேரவையில் அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

    கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அப்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் - மஜத தரப்பு வழக்குரைஞர்களுக்கு இடையே காரசார வாதம் ஏற்பட்டது.

    நாளையே கர்நாடக சட்டப்பேரவையில் எங்கள் தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று காங்கிரஸ் - மஜத தரப்பில் வாதிட்ட அபிஷேக் சிங்வி, எங்களுக்கே முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதனைக் கேட்ட நீதிபதி, கர்நாடக விவகாரம் தொடர்பாக 2 வழியில்தான் தீர்வு காண முடியும். ஆளுநரின் நடவடிக்கையை ஆராய்வது, மற்றொன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே நல்ல முடிவாக இருக்கும். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்றால் நாளையே நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

    மேலும், 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், கூடுதல் அவகாசம் அளிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

    இதற்கு, நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார் என்று காங்கிரஸ் - மஜத தரப்பில் கூறப்பட்டது. மேலும், காலதாமதமின்றி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும், நம்பிக்கை வாக்கெடுப்பை விடியோ பதிவு செய்யவும், எம்எல்ஏக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது கர்நாடக மாநில டி.ஜி.பி. பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடலாமா? எனற நீதிபதிகள் கேட்டார்.

    அப்போது வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், பாஜகவை அழைத்திருப்பது, ஆளுநரின் தன்னிச்சையான செயல் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai