Enable Javscript for better performance
பருவ காலத்துக்கு முன்பாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பருவ காலத்துக்கு முன்பாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 18th May 2018 02:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supremecourt01


    புது தில்லி: மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பருவ காலத்துக்கு முன்பாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் காவிரி பிரச்னையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    இதன் மூலம், காவிரி அமைப்பின் பெயர், தமிழகம் வலியுறுத்தியது போன்று காவிரி மேலாண்மை வாரியம் என்று இல்லாமல், மத்திய அரசு பரிந்துரைத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி வரைவு திட்டத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் முழுவதையும் பருவ காலத்துக்குள் செய்து முடிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதே போல, தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைய உள்ளது.

    இதையடுத்து, மத்திய அரசின் செயல் திட்ட வரைவை இறுதி செய்வது, தமிழகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உட்பட காவிரி விவகாரத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai