Enable Javscript for better performance
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இருவர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் பொதுமக்களின் வசிப்பிடங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
    இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடைபெற்றிருக்கிறது. துப்பாக்கிகளால் சுட்டதுடன், கொத்துக் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    இதையடுத்து, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் இருந்த பள்ளிகள் காலையில் திறக்கப்படவில்லை.
    இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai