Enable Javscript for better performance
பாஜகவுக்கு எதன் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவுக்கு எதன் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி

    By DIN  |   Published on : 18th May 2018 11:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yeddy


    புது தில்லி: 104 இடங்களில் மட்டும் வென்ற பாஜகவை, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது எப்படி என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    கர்நாடக சட்டப்பேரவையில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவை, ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் எடியூரப்பா, நேற்று காலை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில், கர்நாடக ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி, காங்கிரஸ் - மஜத கூட்டணிக் கட்சியினர், 116 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை இருப்பதாகக் கூறிய நிலையில், ஆளுநர் பாஜகவை மட்டும் ஆட்சியமைக்க அழைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது, தனக்கு போதிய ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆளுநர் வஜுபாய் வாலாவிடம், எடியூரப்பா அளித்த கடிதங்களை, பாஜக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    சட்டப்பேரவையில் பாஜகவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முகுல் ரோத்தகி வலியுறுத்த, இதனைக் கேட்ட நீதிபதி, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர முதலில் யாரை அழைப்பது என்பதுதான் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. நாளையே கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா தயாரா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளையே நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர நீதிமன்றம் உத்தரவிடலாம் என்றும் குறிப்பிட்டார்.

    அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலில் எங்களுக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai