Enable Javscript for better performance
பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர வாய்ப்பு?- Dinamani

சுடச்சுட

    
    petrol

    'கர்நாடக தேர்தலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது; தேர்தல் முடிந்து விட்டதால், வரும்காலத்தில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.4 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது'' என்று நிதி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
    கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு சுமார் 19 நாள்கள் வரையிலும், பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. தேர்தலின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், அது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு, கர்நாடகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
    இதனிடையே, கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 12ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கடுத்த 2 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க ஆரம்பித்தன. அதாவது, கடந்த 14ஆம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
    இந்நிலையில், நிதி ஆலோசனை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் இக்விட்டிஸ் கூறுகையில், 'சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4 வரையிலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதேபோல், பெட்ரோலின் விலையும் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.4.55 வரையிலும் உயர்த்தப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளது.
    ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனமும், பெட்ரோல், டீசல் விலை அண்மையில் சுமார் 3 வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த காரணத்தினால், அதன் விலையில் லிட்டருக்கு 31 காசுகள் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai