Enable Javscript for better performance
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: அதிக இடங்களில் திரிணமூல் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: அதிக இடங்களில் திரிணமூல் வெற்றி

    By DIN  |   Published on : 18th May 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    westbengal

    மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதை கொண்டாடும் அக்கட்சித் தொண்டர்கள்.

    மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில், அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக இரண்டாவது இடம் பிடித்தது.
    இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
    திரிணமூல் காங்கிரஸ் கட்சி 19,394 கிராமப் பஞ்சாயத்து இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 5,050 கிராமப் பஞ்சாயத்துஇடங்களில் வென்றது. 
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
    மொத்தம் 1,306 கிராமப் பஞ்சாயத்துகளில் இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
    காங்கிரஸ் 918 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது சுயேச்சைகளை விட குறைவான எண்ணிக்கையாகும். சுயேச்சைகள் 1,614 கிராமப் பஞ்சாயத்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
    புரூலியாவில் திரிணமூல் காங்கிரஸ் 748 கிராமப் பஞ்சாயத்துகளிலும், பாஜக 626 இடங்களிலும் வென்றது. 
    காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முறையே 147, 144 இடங்களில் வென்றது. மால்டா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் 973 கிராமப் பஞ்சாயத்து இடங்களையும், பாஜக, காங்கிரஸ் முறையே 502, 359 இடங்களையும் கைப்பற்றின.
    மூர்ஷிதாபாதில் திரிணமூல் 918, காங்கிரஸ் 359 இடங்களைக் கைப்பற்றியது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    'உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைகள் நடைபெற்றபோதிலும் நாங்கள் 5ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றோம். நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால், 50 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்' என்று மேற்கு வங்க பாஜக பொதுச் செயலர் சயாந்தன் பாசு தெரிவித்தார்.
    திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், 'மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி' என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai