Enable Javscript for better performance
ரமலான் காலத்தில் நடவடிக்கை நிறுத்தம்: பயங்கரவாதிகளின் பெற்றோருக்கு காஷ்மீர் காவல்துறை வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ரமலான் காலத்தில் நடவடிக்கை நிறுத்தம்: பயங்கரவாதிகளின் பெற்றோருக்கு காஷ்மீர் காவல்துறை வேண்டுகோள்

    By DIN  |   Published on : 18th May 2018 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரமலான் காலத்தில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அமைதி பாதைக்கு திரும்பும்படி பயங்கரவாதிகளை அவர்களது பெற்றோர் வலியுறுத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    ரமலான் நோன்மை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க உதவும் வகையில், ரமலான் மாதம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது. 
    அதேநேரத்தில், பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்பட்சத்தில், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை சுற்றுப்பயணமாக செல்லவுள்ளார். அதற்கு 2 நாள்களுக்கு முன்பு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி. வைத் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:
    ரமலான் மாதத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தை காஷ்மீர் பயங்கரவாதிகளின் பெற்றோர் பயன்படுத்திக் கொண்டு, வன்முறையை கைவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்பும்படி, தங்களது பிள்ளைகளை வலியுறுத்த வேண்டும். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எஸ்.பி. வைத் தெரிவித்துள்ளார்.
    பயங்கரவாதிகள் அமைதி பாதைக்கு திரும்ப அவர்களது பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும் என்று எஸ்.பி. வைத் இதற்கு முன்பும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai