Enable Javscript for better performance
ரமலான்: பிரதமர் மோடி வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    
    modi

    முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் ரமலான் மாதம் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'நல்லிணக்கம், இரக்க குணம், தொண்டு செய்தல் ஆகிய குணங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய இறை தூதரான முகமது நபியின் கருத்துகளை நாம் நினைவில் கொள்வோம். இதுவே, புனித ரமலான் மாதத்துக்கான நல்லொழுக்கங்களாகும்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    தனது வாழ்த்துச் செய்தியை முதலில் உருது மொழியில் பதிவிட்ட பிரதமர் மோடி, பின்னர் அதை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அத்துடன், 'மனதின் குரல்' நிகழ்ச்சியின்போது ரமலான் மாதத்துக்காக முன்னதாகவே தான் வாழ்த்து தெரிவித்திருந்த ஒலிப்பதிவையும் அவர் பதிவிட்டிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai