Enable Javscript for better performance
ரூ.200 கோடி கொடுத்தாலும் மஜத எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள்: ஜி.டி.தேவகவுடா- Dinamani

சுடச்சுட

    

    ரூ.200 கோடி கொடுத்தாலும் மஜத எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள்: ஜி.டி.தேவகவுடா 

    By DIN  |   Published on : 18th May 2018 03:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    GTD

    ஹைதராபாத்: குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக ரூ.200 கோடி கொடுத்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் விலைபோக மாட்டார்கள் என சாமுண்டேஸ்வரி தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை தோல்வியடைய செய்தவரும் அவரது நெருங்கிய நண்பராக விளங்கிய மஜத எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். 

    கர்நாடக சட்டபேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நாளை மாலை 4 மணிக்கு நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஹைதராபாத் நகரில் முகாமிட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேரும் பெங்களூருவுக்கு வருகைத் தரவுள்ளனர். 

    காங்கிரஸ். மஜத எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.100 கோடி மற்றும் அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக ஆசைகாட்டி குதிரை பேரத்தில் பாஜக பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

    எடியூரப்பாவின் குடுமியை தங்கள் கையில் வைத்துள்ள காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.,க்களில் யார் எடியூரப்பாவுக்காக கை உயர்த்தப்போவது என்பதுதான் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பாக உள்ள நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் சாமுண்டேஸ்வரி தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா கூறுகையில், ‘100 கோடி அல்ல, 200 கோடி கொடுத்தாலும் மஜத எம்.எல்.ஏ.,க்கள் விலைபோக மாட்டார்கள். அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை அதிகாலை நாங்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறோம்’ என தெரிவித்தார்.

    எடியூரப்பாவின் கை ஓங்குமா? ஒடுங்குமா? என்பது நாளை தெரிந்துவிடும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai