Enable Javscript for better performance
லிங்காயத்து எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவை காப்பாற்றுவார்களா..?- Dinamani

சுடச்சுட

    

    லிங்காயத்து எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவை காப்பாற்றுவார்களா..? 

    By DIN  |   Published on : 18th May 2018 02:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bsy

    நாளை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு நிலையில், காங்கிரஸ், மஜத கட்சியை சேர்ந்த லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவை காப்பாற்றுவர்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
      
    75 வயதாகும் எடியூரப்பா, மூன்றாவது முறையாக பாஜக சார்பில் முதல்வர் பொறுப்பை நேற்று ஏற்றுள்ளார். 

    பின்னர், எனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். மாநில மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கு பாஜக ஆட்சி நடக்கும். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எனக்கு 15 நாள்கள் அவகாசம் அளித்துள்ளார். ஆனால், அந்த அளவுக்கு கால அவகாசம் எடுக்காமல், முடிந்த அளவுக்கு விரைவிலேயே பெரும்பான்மையை நிரூபிப்பேன்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வேன்.  பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜக முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில் பிரம்மாண்டமான விழா நடத்தி அமைச்சரவையை விரிவாக்கம் செய்வேன். 

    மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருந்த போதும், மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், மஜத கட்சியினர் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்துக் கொண்டு ஆட்சியில் அமர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனக்கு ஆதரவாக மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். 

    பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டிருந்தார் எடியூரப்பாவுக்கு, ஆளுநர் 15 நாள் அவகாசம் அளித்துள்ள நிலையில், நாளை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 

    இதையடுத்து 104 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சியை தக்க வைக்க 8 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுக்கு எடியூரப்பா நாளை மாலைக்குள் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்ததில் சித்தராமையா மீதும், தற்போதைய கூட்டணி முடிவின் மீதும் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் பணம் கொடுத்து அவர்களை பாஜக கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் காங்கிரஸில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு பஞ்சமே இல்லை என்றும் கூறப்படுகிறது. 
     
    மேலும், காங்கிரஸ், மஜத இரண்டிலும் உள்ள லிங்காயத்து சமூதாய எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் தனக்கு ஆதரவு அளிக்கக்கோரி எடியூரப்பா தனிப்பட்ட முறையில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. லிங்காயத்து சமூதாய எம்.எம்.ஏ.,க்கள் சுமார் 9க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும், இவர்கள் கடைசி நேரத்தில் எடியூரப்பா ஆட்சிக்கு கைகொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

    எடியூரப்பாவை காப்பற்ற போவது லிங்காயத்து சமூக எம்.எல்.ஏ.,க்களா, பதவி, பணத்துக்கு படியபோகும் காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களா என்பதை நாளை 4 மணிக்கு மேல் தெரிந்துவிடும். 

    கடந்த 2007-ஆம் ஆண்டு முதல்முறையாகப் பதவியேற்றபோது எடியூரப்பாவால் 8 நாள்கள் மட்டுமே முதல்வராக இருக்க முடிந்தது. இரண்டாவது முறையாக, 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளே முதல்வராக இருந்தார். அப்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது பதவி பறிபோனது. இந்த முறை எப்படியோ..? 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai