Enable Javscript for better performance
வீரபத்ர சிங், மகன் மீது ஹிமாசல் போலீஸார் வழக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    வீரபத்ர சிங், மகன் மீது ஹிமாசல் போலீஸார் வழக்குப்பதிவு

    By DIN  |   Published on : 18th May 2018 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங், அவரது மகன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அந்த மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வீரபத்ர சிங்கின் சகோதரரான ராஜேஸ்வர் சிங் என்பவர், சிம்லா போலீஸில் வீரபத்ர சிங், அவரது மகன் விக்ரமாதித்ய சிங் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். 
    அந்தப் புகாரில், தனக்கு சொந்தமான ராமாபூர் அரண்மனையிலுள்ள இடத்தை வீரபத்ர சிங், அவரது மகன் உள்ளிட்டோர் அபகரித்து விட்டதாகவும், அங்கிருந்த தனது உடைமைகளை ஆட்கள் மூலம் வெளியே தூக்கி வீசிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
    இதைத் தொடர்ந்து, இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வீரபத்ர சிங், அவரது மகன் விக்ரமாதித்ய சிங் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகவும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 448, 427, 34 ஆகிய பிரிவுகளின்கீழ் சிம்லா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீரபத்ர சிங், அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் மீதும், அவரது மகன் மீதும் சொத்து அபகரிப்பு புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai