Enable Javscript for better performance
ஹரியாணா முதல்வர் மீது மை வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    ஹரியாணாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் மீது இளைஞர் ஒருவர் மை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஹரியாணா மாநிலம் ஹிசாரில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை முதல்வர் கட்டர் நடத்தினார். அப்போது, பொதுமக்களிடம் கலந்துரையாடிய அவர் மீது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென மையை வீசினார். இதில் பெருமளவிலான மை பாதுகாப்புப் படையினர் மீது சிந்தியபோதிலும், முதல்வரின் தலை, முகம், மற்றும் உடையிலும் மை தெறித்தது.
    இந்த சம்பவத்தால் முதல்வரும் அவருடன் வந்திருந்த அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் தனது பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். முதல்வரின் பாதுகாப்புப் படை வீரர்கள், அவரை அந்த இடத்தில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். ஆனால், மையை வீசி இளைஞர் தொடர்ந்து முதல்வரை நோக்கி ஆக்ரோஷமாக கோஷமிட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் பிரவீண் (30) என்றும், மாநில எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்று இந்திய தேசிய லோக் தளம் மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஹரியாணாவில் கடந்த 2014-ஆம் ஆண்டுதான் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்தது என்பது நினைவுகூரத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai