பாஜக அல்லாத கட்சிகள் அரசை எதிர்க்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்கவுள்ளது: சரத் பவார்

அரசை எதிர்கொள்ள பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்கவுள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 
பாஜக அல்லாத கட்சிகள் அரசை எதிர்க்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்கவுள்ளது: சரத் பவார்

அரசை எதிர்கொள்ள பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்கவுள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று (வியாழக்கிழமை) தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரை தில்லியில் நேரில் சந்தித்தார். 

இந்த சந்திப்புக்கு பிறகு சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றாக பணியாற்றினால்,  ஆர்பிஐ, சிபிஐ போன்ற நிறுவனங்களை நிச்சயம் காப்பாற்ற முடியும். இதுதொடர்பாக, மற்ற மாநில அரசியல் தலைவர்களுடன் சந்திரபாபு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. சிபிஐ மற்றும் ஆர்பிஐ போன்ற நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் எனும் பொது இலக்குக்காக பணிபுரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்த பிறகு குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும். பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து, நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சந்திரபாபு நாயுடுவின் பரிந்துரை தான்" என்றார். 

ஃபரூக் அப்துல்லா கூறுகையில், 

"ஜனநாயகமும் மற்றும் மக்களும் இன்று ஆபத்தில் உள்ளனர். அதனால் தான் நாங்கள் சந்தித்து நாட்டையும், நிறுவனங்களையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.   

சந்திரபாபு நாயுடு கூறுகையில், 

"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பாஜக அல்லாத அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளேன். பாஜகவை எதிர்க்க ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கான தேவை குறித்து அவர்களிடம் எடுத்துரைக்கவுள்ளேன்" என்றார். 

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அதன்பிறகு அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

முன்னதாக, அவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.    

மேலும் இதற்கு முன் கடந்த வாரம் அவர் தில்லிக்கு வந்திருந்தபோது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரையும் சந்தித்தார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தெலுங்கு தேச கட்சி பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியது நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com