இன்று பெட்ரோல் விலை குறைவு; டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல் விலை தொடர்ந்து 15 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமையும் (நவ.1) குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த
இன்று பெட்ரோல் விலை குறைவு; டீசல் விலையில் மாற்றம் இல்லை


சென்னை: பெட்ரோல் விலை தொடர்ந்து 15 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமையும் (நவ.1) குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வந்த பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைக்கும் நடைமுறை கைவிடப்பட்டு, பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை ராக்கெட் வேகத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதையடுத்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீதான கலால் வரியில் ரூ.2.50-ஐ மத்திய அரசு குறைத்தது. பிற மாநிலங்களையும் வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் பெட்ரோல்-டீசல் விலை மீதான வாட்  வரியை குறைத்தன. இதன்பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததையடுத்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையத் தொடங்கியதால், கடந்த 18 ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை இந்தியாவிலும் குறைக்கப்பட்டது.

கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது விவசாயிகள், வாகன ஓட்டிகள், வணிகர்களிடையே சற்று மகிழ்ச்சியை அளித்து வரும் சம்பவமாக உள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து 15 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமையும் (நவ.1) குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.46 ஆகவும், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.78 -க்கே விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.37 ஆகவும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.78 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.32 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுவது இது 15ஆவது நாளாகும். கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.64 ஆகவும், டீசல் விலை ரூ.2.04 ஆகவும் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com