45 விநாடிகளில் நடுவானில் இரு விமானங்கள் மோதவிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு!

நேருக்கு நேர் வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் நடுவானில் மோத இருந்த நிலையில் 45 விநாடிகளில் அதிரிஷ்டவசமாக தப்பிய சம்பவம்
45 விநாடிகளில் நடுவானில் இரு விமானங்கள் மோதவிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு!


கொல்கத்தா: நேருக்கு நேர் வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் நடுவானில் மோத இருந்த நிலையில் 45 விநாடிகளில் அதிரிஷ்டவசமாக தப்பிய சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து கவுகாத்திக்கு கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ விமான ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இதே போன்று கவுகாத்தியில் இருந்து கல்கத்தாவுக்கு மற்றொரு இண்டிகோ விமானம் வந்து கொண்டு இருந்தது. 

கொல்கத்தாவுக்கு சென்ற விமானம் பங்களாதேஷ் எல்லையில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து சென்றுகொண்டிருந்த விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வான் எல்லையில் மாலை 5.10 மணியளவில் பறந்துகொண்டிருந்தது. 

பங்களாதேஷ் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேட்டு கொண்டதால், கொல்கத்தா விமானம் 35 ஆயிரம் அடியில் பறக்கத் தொடங்கிய. இதனால் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உருவானது.

இதனை கண்காணித்து வந்த கொல்கத்தா விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், உடனடியாக சென்னையில் இருந்து சென்ற விமானத்தை வேறு பக்கம் திரும்பச் சென்று பெரும் விபத்தை தவிர்க்குமாறு உத்தரவிட்டனர். 

இதையடுத்து அந்த விமானம் உடனடியாகத் திரும்பியது. இதனால் இரு விமானங்களும் மோது 45 வினாடிகள் இருந்த சூழ்நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இரு விமானிகளிடமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் பங்களாதேஷ் விமான நிலையத்தில் நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாக இருந்தது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டிருப்பது இரு இந்திய விமான நிறுவனங்களும் ஆறுதல் அடைந்துள்ளன. 

விமானத்தில் ஏர்போர்ன் மோதல் தவிர்க்கும் முறை (ஏசிஏஎஸ்) அல்லது டிராஃபிக் அலர்ட் மற்றும் மோதல் அகற்றும் அமைப்பு (டிசிஏஎஸ்) ஆகியவை விமானத்தில் பொருத்தப்பட்டிருந்ததா, விமானிகள் எச்சரிக்கை செய்யப்பட்டார்களா, இல்லையா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமானங்கள் நடுவானில் பறக்கும் போது இரு விமானங்களுக்கு இடையேயான இடைவெளி, செங்குத்து வேறுபாடு மற்றும் பக்கவாட்டு வித்தியாசம், குறைந்தபட்சம் 1000 அடி இருக்க வேண்டும் என விமான நிலையத்தில் உள்ள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com