அயோத்தியில் அமைகிறது 100 மீட்டர் உயர ராமர் சிலை: யோகி ஆதித்யநாத் திட்டம் 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயர ராமர் சிலை ஒன்றை அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அயோத்தியில் அமைகிறது 100 மீட்டர் உயர ராமர் சிலை: யோகி ஆதித்யநாத் திட்டம் 

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயர ராமர் சிலை ஒன்றை அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலையை, பிரதமர் மோடி கடந்த 31-ஆம் தேதி திறந்து வைத்தார். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயர ராமர் சிலை ஒன்றை அமைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயர ராமர் சிலை அமைக்கப்பட்ட உள்ளது. இந்த சிலையானது 36 மீட்டர் உயர் பீடத்தின் மீது நிறுவப்படும். இதற்கு மொத்தமாக ரூ. 300 கோடி செலவாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானஅறிவிப்பை முதலவர் யோகி ஆதித்யநாத் தீபாவளியன்று வெளியிடுவார் என்று தெரிகிறது. 

முன்னதாக இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் மஹேந்திர நாத் பாண்டே கூறியதாவது:

யோகி ஆதித்யநாத் முதல்வர் மட்டுமல்ல; ஒரு துறவியும் கூட. கண்டிப்பாக அவர் அயோத்திக்கு என்று ஏதாவது ஒரு திட்டம் வைத்திருப்பார். தீபாவளி வரட்டும். நல்ல செய்திக்கு காத்திருப்போம். அந்த திட்டத்தினை முதல்வர் அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com