பிரதமர் மோடி தீபாவளிப் பண்டிகையை எங்கே கொண்டாடப்போகிறார் தெரியுமா?

தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற கேதார்நாத்தில் கொண்டாட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தீபாவளிப் பண்டிகையை எங்கே கொண்டாடப்போகிறார் தெரியுமா?


புது தில்லி: தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற கேதார்நாத்தில் கொண்டாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன், பாதுகாப்புப் படை வீரர்களுடன், சியாச்சினில் என நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடி வருகிறார்.

கடந்த ஆண்டு பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய மோடி, பிறகு கேதார்நாத் சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

2016ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் மோடி.

2015ம் ஆண்டு அமிருதசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் தீபாவளியைக் கொண்டாடினார்.

2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு திடீர் வருகை அளித்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் தீபாவளியைக் கொண்டாடினார்.

இந்த ஆண்டு நாளைய தினம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com