இந்தியாவின்  முப்படை அணுச் சாதனை: பிரதமர் மோடி பெருமிதம் 

இந்தியாவின்  முப்படைகளும் அணு ஆயுத பயன்பாட்டில் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின்  முப்படை அணுச் சாதனை: பிரதமர் மோடி பெருமிதம் 

புது தில்லி: இந்தியாவின்  முப்படைகளும் அணு ஆயுத பயன்பாட்டில் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் ராணுவம் மற்றும் விமானப்படை ஆகிய இரண்டும் அணு ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்ற, அதனைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திறனுடைய  படைக்கலன்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. கடற்படையில் அணு ஆயுதங்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வந்தது. 

அதன்படி ஐ.என்.எஸ் அரிஹந்த் என்னும் நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுதங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக ஐ.என்.எஸ் அரிஹந்த் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலானது திங்களன்று வெற்றிகரமாக கடற்படையில் இணைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்தியாவின்  முப்படைகளும் அணு ஆயுத பயன்பாட்டில் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின்  முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்த நாளானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓன்றாகும். உலகளாவிய சமாதானம் மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் அணு ஆயுத பயன்பாட்டுத் திறனானது தூணாக விளங்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com