கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி அணி வெற்றிபோல் உள்ளது: ப.சிதம்பரம்

கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி கிரிக்கெட் வீரர் விராட் கோலி அணி வெற்றி போல் உள்ளது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி அணி வெற்றிபோல் உள்ளது: ப.சிதம்பரம்


கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி கிரிக்கெட் வீரர் விராட் கோலி அணி வெற்றி போல் உள்ளது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பல்லாரி, மாண்டியா உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த இடைத்தேர்தல் வெற்றி, 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இன்று நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் வெற்றிபெற்று படுதோல்வி அடைந்துள்ளது. 

பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா சுமார் 2 லட்சத்து 43 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்திலும், மாண்டியா தொகுதியில் மஜத வேட்பாளர் சிவராமே கௌவுடா 3 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சிவமொக்கா தொகுதியில் முன்னாள் முதல்வரும், எடியூரப்பாவின் மகனும் பாஜக வேட்பாளர் 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோன்று ராம்நகர் முதல்வர் குமாரசாமியின் மனைவியும், மஜத வேட்பாளருமான அனிதா குமாரசாமி வெற்றி பெற்றார். ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் சித்து யமகவுடா வெற்றி பெற்றார். 

இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியில் இருந்து கூட்டணியின் பலனை உணர வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சப் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது என்றும் இதில் கற்க வேண்டிய பாடம், கூட்டணி பலன் தந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com