சபிக்கப்பட்டவர்களின் பொய்யுரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது: அருண் ஜேட்லி

சபிக்கப்பட்டவர்களின் பொய்யுரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி அளித்தார்.
சபிக்கப்பட்டவர்களின் பொய்யுரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது: அருண் ஜேட்லி

சபிக்கப்பட்டவர்களின் பொய்யுரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி அளித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதனால் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. மேலும் வறுமையை ஒழிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசால் அதிகளவிலான நிதியை வழங்க முடிகிறது.  

பாஜக ஆட்சியில் பொருளாதாரம் குறைந்தபட்சம் 2 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று சில சபிக்கப்பட்டவர்கள் பொய்யுரைகளை வெளியிட்டனர். ஆனால், பாஜக ஆட்சியமைத்து தற்போது 5-ஆவது ஆண்டு நடைபெற்று வரும் சூழலில், உலகளவில் மிகப்பெரிய அளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்திய உள்ளது. இது மேலும் தொடரும். எனவே இவ்விவகாரத்தில் சபிக்கப்பட்டவர்களின் பொய்யுரைகள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. 

உலகளவிலான பொருளாதாரம் சரிவை சந்தித்து வரும் வேளையில், தைரியமிக்க பிரதமர் நம்மை ஆண்டு வருவதால், நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட அளவிலான வளர்ச்சியை சந்தித்துள்ளது. சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், அது பொருளாதார ரீதியில் சரியான முடிவாக இல்லாவிட்டாலும், வருங்காலங்களில் அது நற்பலன்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்யும். 

இந்நடவடிக்கைகளில் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளதால், இந்தியாவின் வளர்ச்சிக்கு இது நீண்ட கால அடிப்படையில் நன்மையை ஏற்படுத்தும். கடந்த மே 2014 முதல் வரிச்செலுத்துவோரின் எண்ணிக்கை 3.8 கோடியில் இருந்து 6.86 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அரசின் நிறைவுகாலத்துக்குள் இதை இரட்டிப்பாக்கும் திட்டம் உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்துக்குப் பிறகு வரி ஏய்ப்புகள் குறைந்து கடந்த 2014-15 நிதியாண்டுக்குப் பிறகான பொருளாதாரம் 4.4-ல் இருந்து 5.4-ஆக உயர்ந்துள்ளது. எனவே ரூபாயை பறிமுதல் செய்வது மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கமில்லை. முறையாக வரி செலுத்துவதை அதிகரிக்கச் செய்யவே இது நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் செய்துள்ளது. இது மேலும் வரி வருவாயை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com