சூடுபிடிக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்: சத்தீஸ்கருக்கு படையெடுக்கும் மோடி, ராகுல்

சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கான முதல்கட்ட தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கான முதல்கட்ட தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை (நவ.10) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

 இதையொட்டி, சத்தீஸ்கரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்யவுள்ளனர். இதற்காக தில்லியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காலை 11.20 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஸ்தார் மாவட்டம் ஜெகதால்பூருக்கு மோடி செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்கிறார். இதையடுத்து ராய்ப்பூர் திரும்பும் மோடி, பின்னர் அங்கிருந்து தில்லி செல்கிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது காங்கர் மாவட்டம் பங்கன்ஜோர், கைர்கார் மாவட்டம் ராஜ்நந்த்கோன் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் 5 பிரசார கூட்டங்களில் ராகுல் காந்தி பேசுகிறார். இதன்பின்னர் ஜெகதால்பூரில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முதல்வருமான ரமண் சிங்கின் ராஜ்நந்த்கோன் தொகுதியில் சாலை மார்க்கமாக பயணித்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவும் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com