அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 91-ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 91-ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தேசிய அளவிலான அரசியலுக்கு அத்வானி அளித்த பங்களிப்பு, பாஜகவை அவர் கட்டமைத்த விதம், கொள்கையை வளர்த்தெடுத்தது உள்ளிட்டவை குறித்து அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
 பிரதமர் மோடி, அத்வானியின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்தினார். அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்து கொண்டார்.
 முன்னதாக, சுட்டுரையில் மோடி வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருந்ததாவது: இந்தியாவின் வளர்ச்சிக்காக அத்வானி அளித்த பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அதேபோன்று, மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது நவீனத்துவம் வாய்ந்த கொள்கை முடிவுகளை எடுத்தமைக்காகவும், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை உருவாக்கியமைக்காகவும் அனைவராலும் பாராட்டப்பட்டவர் அத்வானி. தனது மதிநுட்பத்தால் அரசியல் உலகை ஈர்த்தவர்.
 பாஜக தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய பெருமைக்குரிய அத்வானி, வாஜ்பாய் அரசில் துணைப் பிரதமராகவும் இருந்துள்ளார். மேலும் கட்சியை சுயநலமின்றியும், துடிப்புடனும் கட்டமைத்த தலைவர். தொண்டர்களை மிக அழகாக வளர்த்தெடுத்தவர் என்று மோடி கூறியுள்ளார்.
 அமித் ஷா: சுட்டுரையில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ""தனது வாழ்நாள் முழுவதுமான கடின உழைப்பு மூலமாக பாஜகவை பலப்படுத்தியதுடன், தொண்டர்களை கவர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். ஜனசங்கம் முதல் பாஜக வரையிலான காலகட்டத்தில் வெகுமக்களிடம் நமது கொள்கைகளை கொண்டு சென்றவர். நாடாளுமன்றத்தில் திறன்வாய்ந்த அரசியல் தலைவராக இருந்ததன் மூலமாக நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். இந்திய அரசியலுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு ஈடு செய்ய இயலாதது'' என்று தெரிவித்துள்ளார்.
 ராஜ்நாத் சிங்: ""இந்திய அரசியலில் பலம் வாய்ந்த தலைவர். பாஜகவை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தவர் அத்வானி. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை ஈர்த்தவர். அவர் நீண்ட நாள்களுக்கு நலமுடன் வாழ வேண்டும்'' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அத்வானி நீண்ட நாள்களுக்கு நலமுடன் வாழ பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com