ஆப்கன் விவகாரம்: மாஸ்கோவில் இன்று பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா ஏற்பாட்டின்பேரில் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை(நவ.9) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா ஏற்பாட்டின்பேரில் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை(நவ.9) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளவுள்ளது.
 ரஷியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி இந்த பேச்சுவார்த்தைக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் நாடு திடீரென விலகியதால், அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
 இதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தற்போது 2ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ளது. இதில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 இதுதவிர, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்கும் ரஷியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் கேட்கப்பட்டது.
 அதற்கு அவர் பதிலளிக்கையில், "பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளும். ஆப்கானிஸ்தானில் அமைதி, சீரமைப்பு மேற்கொள்ள எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com