ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர்களை மாற்ற சிவசேனை வலியுறுத்தல்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.
 இது தொடர்பாக அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
 உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம், தனது மாநிலத்தில் உள்ள அலாகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றினர். இப்போது ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தி மாவட்டம் என்று அறிவித்துள்ளார். மகாராஷ்டிரத்திலும் இப்படி மாற்ற வேண்டியுள்ளது. முக்கியமாக ஒளரங்காபாதின் பெயரை சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத் நகரின் பெயரை தாராசிவ் எனவும் மாற்ற வேண்டியுள்ளது. மகராஷ்டிர முதல்வர் எப்போது இதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்?
 என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை செய்தித் தொடர்பாளர் மணீஷா காயந்தே, "ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகியவற்றின் பெயரை மாற்ற வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல. பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை உள்ளது. முன்பு காங்கிர-, தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டது. எனினும், முஸ்லிம் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றம்சாட்டினார்.
 முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் முகல்சராய் ரயில் நிலையத்துக்கு பண்டிட் தீன தயாள் உபாத்யாயவின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com