பாஜக எம்எல்ஏவுக்கு தொகுதி ஒதுக்கியது காங்கிரஸ்!

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியிலில் தனது பெயர் விடுபட்டதால் அக்கட்சியின் எம்எல்ஏ சர்தா சிங் (77) கண்ணீர் விட்டு அழுதார்.
பாஜக எம்எல்ஏவுக்கு தொகுதி ஒதுக்கியது காங்கிரஸ்!

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியிலில் தனது பெயர் விடுபட்டதால் அக்கட்சியின் எம்எல்ஏ சர்தா சிங் (77) கண்ணீர் விட்டு அழுதார்.
 32 வேட்பாளர்கள் அடங்கிய 3-ஆவது கட்ட பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. மத்தியப் பிரதேசத்தின் சிவ்னி-மால்வா சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வரும் சர்தாஜ் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்படாத காரணத்தால் அவர் கண்ணீர் சிந்தினார். அப்போது, அவரது ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். அவரின் ஆதரவாளர்கள் கூறுகையில், "சிவ்னி-மால்வா தொகுதியில் 2 முறை எம்எல்ஏவான சர்தாஜ் சிங்குக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கட்சி தெரிவித்துவிட்டது' என்று தெரிவித்தனர்.
 வயதான காரணத்தால், மத்தியப் பிரதேச பொதுப் பணித் துறை அமைச்சர் பதவியிலிருந்தும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் நீக்கப்பட்டார். அவருடன் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து பாபுலால் கௌரும் நீக்கப்பட்டார்.
 இதுகுறித்து மத்தியப் பிரதேச பாஜக செய்தித்தொடர்பாளர் அனில் சௌமித்ரா கூறுகையில், "சர்தாஜ் சிங் மீது கட்சி மதிப்பு வைத்துள்ளது. மத்திய அமைச்சர் பதவியிலும் அவரை நியமித்தது.
 இரண்டு முறை மத்தியப் பிரதேச அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 2 முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார். இதற்கு மேல் கட்சி தனக்கு என்ன செய்ய வேண்டும்? என்று அவர் எதிர்பார்க்கிறார்' என்று கேள்வி எழுப்பினார்.
 வாய்ப்பளித்தது காங்கிரஸ்: பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து சர்தாஜ் சிங், உடனடியாக காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தரிவித்த அவர், "58 ஆண்டுகளாக கட்சியில் இருந்தஎன்னை வயதைக் காரணம் காட்டி பாஜகவில் ஒதுக்கிவிட்டனர். அதே நேரத்தில் எனக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். இந்த நிகழ்வு மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com