மத ரீதியில் பிரசாரம்: கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்த நீதிமன்றம் 

தேர்தலில் மத ரீதியில் பிரசாரம் செய்ததாக கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ கே.எம். ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
மத ரீதியில் பிரசாரம்: கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்த நீதிமன்றம் 

திருவனந்தபுரம்: தேர்தலில் மத ரீதியில் பிரசாரம் செய்ததாக கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ கே.எம். ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   

கேரளாவில் 2016-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது அழீக்கோடு தொகுதியில் முஸ்லீம் லீக் வேட்பாளர் கே.எம். ஷாஜி வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுடன் அவரை எதிர்த்துப்  போட்டியிட்ட நிகேஷ் குமார் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விவடைந்தார். 

அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தின் போது ஷாஜி மதத்தின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டி நிகேஷ் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பினை நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. 

இந்நிலையில் கேரள முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ கே.எம். ஷாஜியை தகுதி நீக்கம் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.        

மத ரீதியில் பிரசாரம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. கே.எம். ஷாஜி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இதுதொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். 

அழீக்கோடு தொகுதியில் புதிதாக தேர்தலை நடத்த வேண்டும். அத்துடன் ஷாஜி ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். 

அதேசமயம் தன்னை வெற்றிப்பெற்றதாக அறிவிக்க கோரிய நிகேஷ் குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 

தற்போது நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஷாஜி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதேசமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஷாஜி அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com