மல்லையாவுக்கு எதிரான நோட்டீஸில் திருத்தம்: ஆவணங்களை வெளியிட சிபிஐ மறுப்பு

விஜய் மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு சிபிஐ மறுத்து விட்டது.
மல்லையாவுக்கு எதிரான நோட்டீஸில் திருத்தம்: ஆவணங்களை வெளியிட சிபிஐ மறுப்பு

விஜய் மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு சிபிஐ மறுத்து விட்டது.
 பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டன் தலைநகர் லண்டனில் விஜய் மல்லையா வசித்து வருகிறார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 முன்னதாக, நாட்டை விட்டு விஜய் மல்லையா வெளியேறும் முன்பு அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீûஸ சிபிஐ முதலில் வெளியிட்டது. அந்த லுக்-அவுட் நோட்டீஸில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறினாலோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு அவர் திரும்பினாலோ, அவரை குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த நோட்டீஸில் பின்னர் சிபிஐ திருத்தம் செய்தது. அதாவது, விஜய் மல்லையா பயணம் எதுவும் மேற்கொண்டால், அதுகுறித்து சிபிஐயிடம் குடியேற்றத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தால் போதும் என திருத்தியது. இதையடுத்தே, சிபிஐ அமைப்பின் முன்பு விசாரணைக்கு மல்லையா ஆஜரானார். பிறகு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு, இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்தார். இதன்பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்ற அவர், அதன்பிறகு நாட்டுக்கு திரும்பி வரவேயில்லை.
 இந்நிலையில், சிபிஐ அமைப்பிடம் புணேயை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் விஹார் துர்வே என்பவர், விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பான ஆவணங்களை வெளியிடக்கோரி மனு அளித்திருந்தார். இந்த மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க மறுத்து விட்டது. இதுகுறித்து விஹார் துர்வேயிடம் சிபிஐ தரப்பில் தகவல் உரிமை சட்டத்தின் 8(1)(ஹெச்) பிரிவின்கீழ், மனுவில் கேட்கப்பட்ட விவரங்களை அளிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோல் ஆர்டிஐ சட்டத்தில் இருந்து தங்கள் அமைப்புக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com