அமைதி மற்றும் அஹிம்சைக்கான குரல்தான் இந்தியா: வெங்கய்யா நாயுடு

நீண்ட நெடுங்காலமாக அமைதி மற்றும் அஹிம்சைக்கான குரலாகவே இந்தியா எப்போதும் இருந்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.  
அமைதி மற்றும் அஹிம்சைக்கான குரல்தான் இந்தியா: வெங்கய்யா நாயுடு


புதுதில்லி: நீண்ட நெடுங்காலமாக அமைதி மற்றும் அஹிம்சைக்கான குரலாகவே இந்தியா எப்போதும் இருந்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.  

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள யுனெஸ்கோவில் இந்திய வம்சா வளியினர் இடையே நேற்று (09.11.2018) அவர் உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் வினய் மோகன் வத்ரா மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். 

வளர்ச்சிக்கு அமைதி மட்டுமே முன்தேவை என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் உலகத்தில் பேச்சு வார்த்தை மற்றும் புரிந்துணர்வு மூலமே வளர்ச்சியை சாதிக்க முடியும் என்றார். 

நீண்டகாலமாக பிரான்சுடன் இருக்கும் வளமான பரஸ்பர உறவு குறித்து அங்குக் கூடியிருந்தோருக்கு நினைவுபடுத்திய குடியரசுத் துணைத் தலைவர், ரவீந்திரநாத் தாகூரின் அறிவுச் செல்வாக்கு, பிரான்ஸ் நாட்டின் சிந்தனையாளர்கள் பலருக்கு ஈர்ப்பாக அமைந்ததை அறிவோம் என்றார்.  இந்தியாவின் விடுதலை வரலாற்றுக்கு முன்னால் இருந்த மேடம் பிக்காஜி காமா, ஜே ஆர் டி டாடா போன்ற பிரமுகர்கள் பிரான்சுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் என்பது தேச அளவில் திறமையான இசைவான சந்தையை உருவாக்குவதில்,  முக்கிய நடவடிக்கையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் வணிகத்தை நிறுவுவதற்கும் வளர்ப்பதற்கும் இது எளிய வழியாக இருக்கும் என்றும் கூறினார். 

புதிய இந்தியா உருவாக்கத்தில் இந்திய வம்சாவளியினர் தீவிரப் பங்களிப்பைச் செலுத்துமாறு நாயுடு அழைப்பு விடுத்தார்.  இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குமான நேரத்தையும் பொருத்தமான வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.    உங்களின் வேர்களோடு நீங்கள் இணைந்து கொள்வதற்கு இது முக்கியமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் ஆட்ரே அசவ்லேயுடன் கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர், நீடிக்கவல்ல வளர்ச்சியைக் குறிப்பாக கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான 2030 ஆம் ஆண்டுக்குரிய செயல்களை செய்து முடிப்பதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com