இன்று பெட்ரோல், டீசல் விலை விபரம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56, டீசல் ரூ.76.43க்கு விற்பனை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 26 நாள்களாக சரிந்து வருதையடுத்து, இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய
இன்று பெட்ரோல், டீசல் விலை விபரம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56, டீசல் ரூ.76.43க்கு விற்பனை


சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 26 நாள்களாக சரிந்து வருதையடுத்து, இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து முறையே லிட்டருக்கு 17 காசுகள், 16 காசுகள் குறைக்கப்பட்டு, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.56 ஆகவும், டீசல் ரூ.76.43 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கி, இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்து வருவது ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து முறையே பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் 16 காசுகளும் இன்று திங்கள்கிழமை (நவ.12)  குறைக்கப்பட்டதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, கலால் வரி மிகக் குறைவானதாகக் கருதப்படும் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.56 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.72.31 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமாக கலால் வரி விதிக்கப்படும் மும்பையில், இன்று பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.83.07 மற்றும் ரூ.75.76 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.56 ஆகவும், டீசல் ரூ.76.43 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

விலை ஏறியது எப்படி?: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாலும் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

கடந்த மாதம் 4-ஆம் தேதி பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் ரூ.84-ஆகவும், மும்பையில் ரூ.91.34-ஆகவும் இருந்தது. டீசல் லிட்டருக்கு ரூ.75.45 என்ற அளவில் தில்லியிலும், ரூ.80.10 என்ற அளவில் மும்பையிலும் அன்றைய தினத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

ஆகஸ்ட் 16 முதல் அக் 4 ஆம் தேதி வரையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.86-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.73 என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டது.

அதே நாளில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 காசுகள் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததுடன், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.1 குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆக மொத்தம், இரண்டின் விலையிலும் ரூ.2.50 வரை குறைக்கப்பட்டது.

இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, அக்டோபர் 17-ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதற்கு அடுத்த நாளில் இருந்து அவற்றின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 26 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.54-ம், டீசல் விலை ரூ.3.61 என்ற அளவில் குறைந்துள்ளது. 

இனி வரும் நாள்களில், பெட்ரோல், டீசலின் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com