கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம்: எம்.பி.க்களுக்கு மக்களவைச் செயலர் அறிக்கை

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு மக்களவைச் செயலர் ஒரு அறிவுறுத்தல் அறிக்கையை அனுப்பியுள்ளார்.
கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம்: எம்.பி.க்களுக்கு மக்களவைச் செயலர் அறிக்கை


புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு மக்களவைச் செயலர் ஒரு அறிவுறுத்தல் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையை எதிர்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைச் செயலர் அனுப்பியிருக்கும் அறிக்கையில், குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு வரும் உறுப்பினர்கள், குரங்குகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம், குரங்குகள் கூட்டமாக இருக்கும் போது அங்கிருந்து ஓட வேண்டாம், ஏதேனும் வாகனம் குரங்குகள் மீது மோதிவிட்டால் அங்கே இருக்க வேண்டாம், எந்தக் காரணத்தைக் கொண்டும் குரங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவைகளைத் தனியாக இருக்க விட்டுவிடுங்கள். அப்போதுதான் அவை நம்மை தொல்லை செய்யாது. குரங்குகளை கண்டுகொள்ளாமல் அமைதியாக வந்துவிடுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கால் தாமதமாக வந்த எம்.பி.
கடந்த முறை நாடாளுமன்றக் கூட்டத்தின் போது மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் தாமதமாக அவைக்கு வந்தார். ஏன் என்று வெங்கய்யா நாயுடு கேட்டதற்கு, குரங்கிடம் மாட்டிக் கொண்டதாகக் கூறினார். இதனைக் கேட்ட வெங்கய்யா நாயுடு, குரங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com