தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: இளைஞர் கைது 

தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகத்திற்கு அருகில் அவர் மீது மிளகாய்ப்பொடி வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 
தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: இளைஞர் கைது 

புது தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகத்திற்கு அருகில் அவர் மீது மிளகாய்ப்பொடி வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தில்லி தலைமைச் செயலகத்தின் உள்ளே முதல்வர் கேஜரிவாலின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு செவ்வாயன்று புகுந்த அனில்குமார் என்ற இளைஞர், வெளியில் வந்த முதல்வர் கேஜரிவாலின் மீது மிளகாய்ப்பொடியை வீசினார். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தில்லி மாநில ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

முதல்வர் மீதான இந்த தாக்குதலில் அவரது கண்ணாடி கீழே விழுந்து உடைந்துள்ளது. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்புக் குறைபாடு என்பதைத் தவிர வேறில்லை. ஒருவேளை தாக்க வந்தவர் வேறு ஏதேனும் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். யார் ஆபத்து நேராமல் காப்பது?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com