விவகாரத்து மனுவை வாபஸ் பெற்றார் லாலு பிரசாத் யாதவ் மகன்: குடும்பத்தினரின் அழுத்தம் காரணம்? 

குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனுவை, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் வாபஸ் பெற்றார் 
விவகாரத்து மனுவை வாபஸ் பெற்றார் லாலு பிரசாத் யாதவ் மகன்: குடும்பத்தினரின் அழுத்தம் காரணம்? 

பாட்னா:  குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனுவை, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் வாபஸ் பெற்றார் 

பிகார் முன்னாள் முதல்வர் தரோகா ராய் பேத்தியும், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகளுமான ஐஸ்வர்யா ராய்க்கும், தேஜ் பிரதாப் யாதவுக்கும் கடந்த மே மாதம் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. கால்நடைத் தீவன ஊழலில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் இவரது திருமணத்துக்கு பரோலில் வந்திருந்தார். இந்த திருமணத்தில் கட்சி பேதமின்றி முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில்,  பாட்னா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கடந்த மாதம் தேஜ் பிரதாப் மனு தாக்கல் செய்தார். அதற்கு விளக்கம் தெரிவித்து அவர் கூறியதாவது:

எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று பலமுறை பெற்றோரிடம் தெரிவித்தேன். தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு என்னை சம்மதிக்க வைத்தனர். நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்பவன். எனது மனைவி ஐஸ்வர்யா நகரத்தில் படித்து அந்த கலாசாரத்தில் வாழ்பவர். அவருக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. 

இரு மாதங்களாக அவரிடம் பேசுவதும் இல்லை. துயரத்திலேயே வாழ வேண்டாமென்று முடிவெடுத்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த மனுவை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. நவமபர் 29-ஆம் தேதி மனு மீதான விசாரணை தொடங்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனுவை, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் வாபஸ் பெற்றார் 

இந்த பிரச்சினை லாலு குடும்பத்திலும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் அரசியல் நடவடிக்கைக்கும் பின்னடைவாக உருவானது. தேஜ் யாதவின் அரசியல் நடவடிக்கையையும் முடக்கியது. 

குடும்பத்தில் எழந்த இந்த பிரச்சினையின் காரணமாக மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பிஹார் அரசுக்கு எதிரான ரத யாத்திரை ஆகியவற்றையும் தேஜ் யாதவ் நிறுத்தி வைத்து இருந்தார்.

பாட்னா நீதிமன்றத்தில் தேஜ் தாக்கல் செய்திருந்த வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை திரும்ப பெறுவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தல் காரணமாக அவர் விருப்பமின்றி இந்த முடிவை எடுத்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com