வெளி மாநிலத்தவர் மீதான தாக்குதல் எதிரொலி: குஜராத்திலிருந்து வெளியேறிய 20 ஆயிரம் தொழிலாளர்கள் 

குஜராத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் மீதான தாக்குதலின் எதிரொலியாக, அம்மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
வெளி மாநிலத்தவர் மீதான தாக்குதல் எதிரொலி: குஜராத்திலிருந்து வெளியேறிய 20 ஆயிரம் தொழிலாளர்கள் 

அகமதாபாத்: குஜராத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் மீதான தாக்குதலின் எதிரொலியாக, அம்மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதியன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்  தொழிலாளியான ரஜிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொடூர சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வெளி மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
அதிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் வசிக்கும் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேசமயம் இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய பீதியின் காரணமாக கடந்த ஒருவார காலத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்தும் அநேகம் பேர்  வெளியேறி வருவதாகவும்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

இதுதொடர்பாக மாநில முதல்வர் விஜய் ருபானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. 
நிலைமை குஜராத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பராமரிக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வோம் 

இதுதொடர்பாக ஏதாவது பிரச்சனைகளால் பாதிக்கப்படும் வெளிமாநிலத்தவர்கள் போலீசில் புகார் அளித்தால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com