நீரவ் மோடி மற்றும் மல்லையாவுடன் நட்பு, எங்கள் மீது சோதனையா? - தில்லி முதல்வர் கேஜரிவால்

அடுத்த முறை சோதனை நடத்துவதற்கு முன் தில்லி மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு இடையூறு கொடுப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று பிரதமர் மோடி குறித்து தில்லி முதல்வர் கேஜரிவால் டிவீட் செய்துள்ளார்.  
நீரவ் மோடி மற்றும் மல்லையாவுடன் நட்பு, எங்கள் மீது சோதனையா? - தில்லி முதல்வர் கேஜரிவால்

அடுத்த முறை சோதனை நடத்துவதற்கு முன் தில்லி மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு இடையூறு கொடுப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று பிரதமர் மோடி குறித்து தில்லி முதல்வர் கேஜரிவால் டிவீட் செய்துள்ளார்.  

தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் இல்லம் உட்பட அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று (புதன்கிழமை) சோதனையில் ஈடுபட்டனர். 30 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைச்சர் கெலாட்டுக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, 

"நீரவ் மோடி மற்றும் மல்லையா போன்றவர்களுடன் நட்பு. எங்கள் மீது சோதனையா? மோடி அவர்களே சத்யேந்தர், மணீஷ் மற்றும் என் மீது சோதனை நடத்தியுள்ளீர்கள். அந்த சோதனைகள் என்னவாயிற்று? எதுவும் கிடைக்கவில்லை. அதனால், அடுத்த முறை சோதனையை நடத்தும் முன் தில்லி மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு இடையூறு கொடுப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்" என்றார். 

இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் சௌரப் பரத்வாஜ் கூறுகையில், 

"ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் ஊழல் தொடர்பாக ஏதேனும் கிடைத்திருந்தால் அதனை சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையினர் வெளியிடவேண்டும். இதற்குமுன் பல சோதனைகள் நடைபெற்றுள்ளது. ஆனால், எதுவும் வெளிவரவில்லை. குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை" என்றார். 

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கைலாஷ் கெலாட் தில்லியின் போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருக்கிறார். அவர் நஜஃப்கார் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com