ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பால் மாநில அரசுகளுக்கு லாபம்: நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் அதிகரிப்பால் மாநில அரசுகளுக்கு லாபம் ஏற்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பாஜக சார்பில் வணிகர் தாமரை மாநில மாநாட்டில் விழா மலரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பாஜக சார்பில் வணிகர் தாமரை மாநில மாநாட்டில் விழா மலரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வருவாய் அதிகரிப்பால் மாநில அரசுகளுக்கு லாபம் ஏற்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பாஜக வணிகர் மாநில மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த வணிகர் மாநாடு ஒரு பிள்ளையார் சுழியாகும். இந்தியாவில் 48 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாததை 48 மாதங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளது.
ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டு காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. 
ஆனால், பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தப் பாடுபட்டு வருகிறார். மத்திய அரசு சரக்கு மற்றும் சேவைகள் வரியை நடைமுறைப்படுத்தியுள்ளது. 
இந்த வரி விதிப்பால் ரூ.100-க்கு ரூ.42 மாநில அரசுகளுக்கு கிடைக்கிறது. ஜி.எஸ்.டி வரி அதிகரித்தால் அது மாநில அரசுகளுக்கு ஆதாயம் உண்டு. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். தமிழகத்தில் மிகப் பெரிய மாறுதல் தேவை. அதற்கு வணிகர்களின் ஒத்துழைப்பு தேவை என்றார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், 14 கோடியே 10 லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் பாஜகவை விடுத்து எந்தக் கட்சியும் அரசியல் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக பெயரைச் சொல்லாமல் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாத அளவுக்கு பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் இலங்கை தமிழர் படுகொலை எதிரொலிக்கும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தால் 2 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இருந்தும் எங்களது கட்சி சார்பில் பல எம்.பி.க்கள் மக்களவையை அலங்கரிப்பர் என்றார்.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்பட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com