முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக குறிப்பிட வேண்டாம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

அவசரமாக விசாரிப்பதற்கு அவசியம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக குறிப்பிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வழக்கறிஞர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார். 
முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக குறிப்பிட வேண்டாம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

அவசரமாக விசாரிப்பதற்கு அவசியம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக குறிப்பிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வழக்கறிஞர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரஞ்சன் கோகோய், புதிய வரையறைகளை வகுக்கப்படும் வரையிலும், தூக்குத் தண்டனை, ஆக்கிரமிப்பு அகற்றம் அல்லாத பிற எந்த விவகாரங்கள் குறித்தும் அவசர வழக்குகளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இதுதொடர்பாக இன்று மீண்டும் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக, அவர் தெரிவிக்கையில், "அவசர வழக்காக குறிப்பிடும் சிறப்பு உரிமை வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசரம் இல்லாத வழக்குகளை குறிப்பிட்டால், ஒருநாள் இந்த சிறப்பு உரிமையை வழக்கறிஞர்கள் இழக்க நேரிடும்" என்றார்.    

இதைத்தொடர்ந்து, அடுத்த கிரிக்கெட் போட்டி அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கு பல துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் இதை அவசர வழக்காக குறிப்பிட வேண்டும் பிசிசிஐ சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த ரஞ்சன் கோகோய் அமர்வு, "வானம் இடிந்து விழும் அளவுக்கு அது அவசர வழக்கு கிடையாது. அக்டோபர் 29-ஆம் தேதி தான் போட்டி நடைபெறுகிறது என்று கூறுனீர்கள். தசரா விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அனைவரது வழக்கும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றால், தசரா விடுமுறையை ஒத்திவைக்கவேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் சம்மதிக்குமா" என்று தெரிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com